புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீவைப்பு!

343

புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அரசு சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரி முதல்வருக்கும் ஆளுநர் கிரண் பேடிக்குமிடையே அதிகார யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி சுதேசி மில் அருகே மாநில போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 அரசு பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. தீ வைப்புக்கான காரணம் தெரியாததால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இந்த தீவைப்பு சம்பவம் புதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.