புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான ஆலோசனை..!

167

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018 – 19 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4,5 ம் தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து, சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், துறை சார்ந்த அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துறை ரீதியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி, புதிய அறிவிப்புகள், நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. விரைவில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.