எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா 5ம் இடம் பிடித்து அசத்தல்..!

407

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா 5ம் இடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவு தேர்வு நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 291 தேர்வு மையங்களில் காலை, மதியம் என இரு பிரிவுகளாக தேர்வு நடைபெற்றன. காலையில் ஒரு லட்சத்து ஆயிரத்து 321 மாணவர்களும், மதியம் 96 ஆயிரத்து 424 மாணவர்களும் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள நேற்று வெளியிடப்பட்டன.

அதில், சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 99 புள்ளி ஒன்பது ஒன்பது ஆறு மூன்று சதவீதம் மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 5-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு இம்மாதம் இறுதி்யில் நடைபெற உள்ளது. ஜூலை 4-ந் தேதி முதல் மருத்துவ படிப்பிற்கான வகுப்புகள் தொடங்குகின்றன.