புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மக்கள் விரோத வரிகளை ரத்து செய்யக்கோரி, வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக, இன்று கடையடைப்பு போராட்டம்..!

369

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மக்கள் விரோத வரிகளை ரத்து செய்யக்கோரி, வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக, இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கான வரிகளை தாறுமாறாக அரசு உயர்த்தியுள்ளதாக வணிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதவிர, வீடுகள், கடைகள், திருமண மண்டபங்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு குப்பை வார வரி என நோட்டீஸ் அனுப்பியும், நேரடியாக வீடுகளுக்கு சென்றும் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் நாராயணசாமியை வர்த்தகர்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து, வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.