புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துகோரி, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்..!

96

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துகோரி, டெல்லியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இதனைத்தொடர்ந்து, கடந்த ஜீலை 23ஆம் தேதி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி எம்எல்ஏ-க்கள் கொண்ட குழுவினர், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரத்தில், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டெல்லி ஜன்தர்மந்தரில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், என்ஆர் காங்கிரஸ், அதிமுகவைத்தவிர, காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.