எல்.ஐ.சி. நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது : புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி பெருமிதம்.

303

புதுச்சேரியில் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக எல்.ஐ.சி. செயல்பட்டு வருவதாக, அதன் 61-வது ஆண்டு விழாவில் முதல்வர் நாரயணசாமி பெருமிதம் கொண்டார்.

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், எல்.ஐ.சி.யின் சிறப்பான செயல்பாட்டால் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் மக்கள் பணத்தை மக்களுக்கு திரும்பி அளிக்கும் பல நிறுவனங்களை, எல்.ஐ.சி.யின் மீது தான் மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக கூறிப்பிட்டார்.இதே போல் புதுச்சேரி காவல்துறை சார்பில் நடைபெற்ற தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாராயணசாமி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு காரணம் மன அழுத்தம், குடும்பப்பிரச்சினை, குடிப்பழக்கமே காரணம் என்றும் வேதனை தெரிவித்தார்.