விதிகளை மீறி படகில் பயணிகளை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் : மீனவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

1485

புதுச்சேரி கடலுக்குள் விதிகளை மீறி படகில் பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடுக்கடலில் சிக்கி தவித்த 18 பேர் கடலோர காவல்படையால் மீட்கப்பட்டதாக கூறினார். புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில், அவர்கள் சென்ற படகு எந்தவித உயிர்காக்கும் அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்று நாராயணசாமி தெரிவித்தார். விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.