சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி : நவீன கழிவறைகளையும் திறந்து வைத்தார்

278

தூய்மை இந்தியா திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் புதுச்சேரி முழுவதும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நவீன வசதிகள் கொண்ட கழிவறையை திறந்து வைத்தார். கூடிய விரைவில் புதுச்சேரி பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்