காரைக்கால் மாங்கனி திருவிழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு வேண்டுதல் செய்தார்..!

257

கோலாகலமாக நடைபெற்று வரும் காரைக்கால் மாங்கனி திருவிழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு வேண்டுதல் செய்தார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில் கொண்டுள்ள, காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா, கடந்த 25-ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

நேற்று காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோயிலுக்கு வருகை தந்து, வேண்டுதல் செய்தார்.