மத்திய அரசு நிதியை உயர்த்தி தர வலியுறுத்தல் – புதுச்சேரி முதலைச்சர் நாராயணசாமி

227

மத்திய அரசு நிதியை உயர்த்தி தர வேண்டும் என புதுச்சேரி முதலைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் நிதியை புதுச்சேரிக்கு உயர்த்தி தர வேண்டும் என்றார். மத்திய அரசு உதவியோடு திட்டங்களுக்கான விகிதாச்சாரத்தை உயர்த்த வலியுறுத்திய நாராயணசாமி, மாநில முதல்வர்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பதாக கூறினார். கூட்டாட்சி தத்துவத்தை மோடி மறந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.