ஏஎப்டி தொழிலாளர்கள் கழுதையிடம் மனு தரும் போராட்டம்

93

புதுச்சேரி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, முதலியார்பேட்டையில் ஏஎப்டி பஞ்சாலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் ஊதியம் நிலுவை வைத்துள்ளதால் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 5 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.