புதுச்சேரிக்கு 6 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தல். தனித்தீர்மானம் கொண்டு வராத காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு.

250

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரியில் 14வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர்கள், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைய, தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி மறுப்பு தெரிவித்ததையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.