காந்தி ஜெயந்தி விழா : எம்எல்ஏ அன்பழகனை வெளியேற்ற ஊழியர்களுக்கு ஆளுனர் உத்தரவு

397

புதுச்சேரியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடியுடன் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில், ஆளுனர் கிரண்பேடி முன்னிலையில், அதிமுக எம்எல்ஏ அன்பழகன், அரசு திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஒன்றுமே நிறைவேற்றப்பட்டவில்லை என்றும் கூறினார். மேலும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் ஆவேசமாக பட்டியலிட்டார். இதனையடுத்து, ஆளுனர் கிரண்பேடி, பேச்சை நிறுத்தும்படி கூறியும், அன்பழகன் தொடர்ந்து கிரண்பேடியை விமர்சித்து பேசினார். இதனால் அதிருப்தியடைந்த கவர்னர் கிரண்பேடி, மைக்கை ஆப் செய்யும்படி, ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மைக் ஆப் செய்யப்பட்டது.

கிரண்பேடியின் இந்த நடவடிக்கை அன்பழகனுக்கு மேலும் ஆத்திரம் ஏற்படுத்தியது. உடனே, கிரண்பேடியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், கிரண்பேடி, அன்பழகனை மேடையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அன்பழகன்,’நீங்கள் வெளியேறுங்கள்’ என்று சைகையில் பேசினார். கவர்னர் கிரண்பேடி- அதிமுக எம்எல்ஏ அன்பழகனின் இந்த மோதல் சம்பவத்தால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.