அரசு சார்பில் சட்டப்பூர்வ பரிமாற்ற தின விழா..!

320

புதுச்சேரி, இந்தியாவோடு முறைப்படி இணைந்தநாள், சட்டப்பூர்வ பரிமாற்ற தினமாக இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1954ஆம் ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்றது. இருப்பினும், 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுச்சேரி, இந்தியாவோடு முறைப்படி இணைந்த நாள், சட்டப்பூர்வ பரிமாற்ற தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, புதுச்சேரி, இந்தியாவோடு இணைவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்ற இடமான கீழூரில் உள்ள நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தியாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.