புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

175

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகின்றன. இதனைத் தடுக்க மாவட்டத்தில் உள்ள ஒன்பது சோதனைச் சாவடியிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில், போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, புதுச்சேரியில் இருந்து வந்த சொகுசு மடக்கியபோது, ஓட்டுனர் இறங்கி தப்பியோடிவிட்டார். பின்னர் வாகனத்தை சோதனையிட்டதில், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை கைப்பற்றிய போலீசார், தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.