புதுச்சேரியில் சமாதானமாக போகக் கூடிய பல்வேறு வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.

212

புதுச்சேரியில் சமாதானமாக போகக் கூடிய பல்வேறு வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள தேசிய மக்கள் நிதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கு தீர்வு காணப்பட்டன. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வீரநாத்ராவ் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் வழிகாட்டுதலின் பேரிலும் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதில் சட்டப்பணி ஆணைய செயலாளர் சோபனா தேவி தலைமையில் ஒரு அமர்வும், தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிபதி பத்மநாபன் தலைமையில் மற்றொரு அமர்வும், விசாரணை மேற்கொண்டு, தீர்ப்புகளை வழங்கினர். காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட இடங்களிலும், மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு வருவதாக நீதிபதி சோபனா தேவி தெரிவித்தார்.