புதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது : எம்.பி. கண்ணன் குற்றச்சாட்டு.

328

புதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டதாக, அதிமுக முன்னாள் எம்.பி. கண்ணன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் கண்ணன், முதல்வர் நாராயணசாமி நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், மாணவர்களிடம் கணிவாக பேசி, கல்லூரி நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் நாராயணசாமிக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே என்று கூறிய கண்ணன், தேர்தல் அதிகாரி கந்தவேலு துணையாக இருப்பதாகவும், மத்திய இணை அமைச்சராக இருந்த போது நாராயணசாமி செய்த ஊழலுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.