சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற பாஜக-வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

213

புதுவை சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற பாஜக-வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவை சட்டமன்றத்திற்கு பாஜக -வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.க்களாக கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு நியமித்தது. ஆனால் மூவரையும் சபாநாயகர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்காததோடு சட்டசபைக்குள் நுழையவும் அனுமதி மறுத்தார். இதையடுத்து நேற்று 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் தங்களை இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்ட சபைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை சட்டசபை வாயிலிலேயே காவலர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காவலர்களிடம் மூன்று எம்.எல்.ஏ.க்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.