கிரண் பேடி மீது நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை..!

355

துணைநிலை ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நாடு முழுவதும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசியல் பிரச்சினையில் துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, டெல்லிக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், புதுச்சேரிக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் நாராயணசாமி, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புதுச்சேரிக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் பொருந்தும் எனத் தெரிவித்தார். சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து கிரண் பேடி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.