ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு..!

216

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஆக்கிரமிப்பு குறித்து அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலங்குடி வட்டாச்சியர் ரெத்தினவதி முன்னிலையில் 3 வீடுகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.