புத்தாண்டு உற்சாகம் : வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் விழாக் கோலம்

95

புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடும் வகையில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

நாளை தொடங்க உள்ள ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். சொகுசு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், பார்கள் என திரும்பும் பக்கமெல்லாம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் கிடைப்பதாலும் மதுப்பிரியர்கள் புத்தாண்டை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட பொறுப்பு ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொறுப்பு ஆட்சியர் விக்கிரமராஜா, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.