10 மாதங்களாக ஊதியம் வழங்காததால் அரசு கூட்டுறவு பாண்டெக்ஸ் நிறுவன ஊழியர்கள் நூதனப் போராட்டம்..!

265

10 மாதங்களாக ஊதியம் வழங்காத புதுச்சேரி கூட்டுறவு பாண்டெக்ஸ் நிறுவனத்தை கண்டித்து, கஞ்சி காய்ச்சும் நூதனப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு பாண்டெக்ஸ் நிறுவனத்தில் சுமார் 80 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதங்களாக அந்நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்தும், புதுச்சேரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கஞ்சி காய்ச்சும் நூதனப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.