மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்..!

333

மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி உப்பளம் தொகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை மின்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பொதுமக்களுடன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திடீரென மின் கட்டணத்தை புதுச்சேரி அரசு உயர்த்தி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். சீனாவில் இருந்து புதிய மின் இணைப்பு மீட்டர்களை வாங்கிய, புதுச்சேரி அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.