புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி ராஜீவ் காந்தி சிக்னலில் தொடங்கிய இப் பேரணியை, காவல்துறை இயக்குனர் சிவகாமி சுந்தரி நந்தா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகாமி சுந்தரி நந்தா, இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.