பி.எஸ்.எல்.வி. சி34 விண்கலன் திட்டமிட்ட படி நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்

269

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 செயற்கைக்கோள்களை ஏந்தி செல்லும், பிஎஸ்எல்வி-சி34 விண்கலம் நாளை காலை 9.26 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாயும் என கூறினார். சந்திராயன்-2 பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.