பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2A செயற்கைகோளுடன் PSLV C-36 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

231

பூமியை கண்காணிக்க, ஆயிரத்து 235 கிலோ எடை கொண்ட ரிசோர்ஸ் சாட்-2A என்ற 3-வது செயற்கைகோளை, இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் திட்டமிட்டப்படி , PSLV C-36 ராக்கெட் மூலம் இன்று காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.
இதற்கான கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 மணிக்கு தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. 5 ஆண்டுகள் வரை செயல்படும் இந்த செயற்கைகோள், இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.