பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2A செயற்கைகோளுடன் PSLV C-36 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

169

பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2A செயற்கைகோளுடன் PSLV C-36 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

பூமியை கண்காணிக்க ரிசோர்ஸ் சாட்-2A என்ற செயற்கைகோள் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஆயிரத்து 235 கிலோ எடை கொண்ட, இந்த செயற்கை கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 மணிக்கு தொடங்கியது.

இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று காலை 10.24 நிமிடத்தில் PSLV C-36 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்த ரிசோர்ஸ் சாட்-2A என்ற செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. 5 ஆண்டுகள் வரை செயல்படும் இந்த செயற்கைகோள், இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.