ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை வெளியிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

115

தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடைசெய்ய பீட்டா அமைப்புக்கு எந்த அறுகதையும் கிடையாது என தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவின் நடவடிக்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கள், தமிழக முதலமைச்சரின் அறிக்கையை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.