மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவு..!

669

மனைவியை கொலை செய்துவிட்டு, தலைமறைவாகியுள்ள கணவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வரதராஜபுரத்தை சேர்ந்த சிவராஜன் , தனது மனைவி வாணியை பிரிந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வாழ்ந்து வந்தார். இவர்களது 16 வயது மகன் விருப்பத்தின் பேரில், ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கணவன், மனைவியை சேர்த்து வைத்தனர். ஆனால், இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில், வீட்டில் மயங்கி கிடந்த வாணியை, அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வாணியின் உடலில் காயம் இருந்ததால், அவரது கணவர் சிவராஜ் தான் அடித்து கொன்றதாக கிராம மக்கள் குற்றச்சாட்டினார். மேலும், கொலையை மறைக்க வாணியின் உடலில் பூச்சி மருந்து தெளித்து விட்டு தலைமறைவாகி விட்டதால், அவரை உடனே கைது செய்யக்கோரி உறவினர்கள், கிராம மக்கள் தேனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.