ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

258

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகளை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகளை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பிரையன் ஓ டெரிக் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, முழக்கமிட்டபடி எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.