கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு 3 பேர் தற்கொலை..!

197

மகாராஷ்ராவில் இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். புனே மாவட்டம் ககன் பகுதியில் மராத்தா சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. காவல்துறையினர் நடத்திய தடியடியில் 4 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இடஒதுக்கீடு கேட்டு 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்து, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இடஒதுக்கீடு தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் , ஆகஸ்ட் 9ம் தேதி மும்பையில் மாபெரும் பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.