500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

196

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 14ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்க மறுப்பதால், விவசாய நகைக்கடன் வட்டி, மானிய கடன் தவணை ஆகியவற்றிற்கு பணம் செலுத்த முடியாத நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகள் திருப்ப முடியாமல், விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கண்டித்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு பணியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.