பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 3 வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்..!

908

பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 3 வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளை பாலியல் தொல்லைக்கு அழைத்தாக பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 3 வது நாளான இன்று விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ. டி போலீசார் அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக நிர்மலா அளித்த வாக்குமூலம் அடிப்படையில் அருப்புக்கோட்டை அடுத்த ஆத்திப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனிடையே நிர்மலா தேவியை விசாரிக்க அனுமதி கேட்டு, மதுரை சிறைத்துறை அதிகாரிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் கடிதம் அனுப்பியுள்ளார். நிர்மலா தேவி சர்ச்சை விவகாரம் தொடர்பாக ஆர்.சந்தானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.