முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்துக்கு டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, வாஜ்பாய் உடல், பாஜக தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு திரண்டுள்ள பாஜக தொண்டர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து, இறுதி ஊர்வலம் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து, இறுதிச்சடங்கு நடைபெறும் டெல்லி விஜய்காட் பகுதி வரை நடைபெறும் இறுதி ஊர்வலத்துக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் தொண்டர்கள், வசதி குறைபாடுகளை தவிர்க்க, காவல்துறையினரின் பாதுகாப்புில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என டெல்லி காவல்துறை உதவி ஆணையர் மாத்தூர் வர்மா தெரிவித்துள்ளார். ஊர்வலம் விஜய்காட் பகுதியைச் சென்றடைந்தவுடன், மாலை 4 மணிக்கு வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவி்ககப்பட்டுள்ளது.