மும்பையிடம் வீழ்ந்தது டெல்லி : 8வது வெற்றியை பதிவு செய்தது மும்பை

297

ப்ரோ கபடி போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி டெல்லியை வீழ்த்தி 8வது வெற்றியை பதிவு செய்தது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 89வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி, டெல்லி அணியுடன் மோதியது. இதில் 30க்கு 28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 8-வது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணியுடனும், தபாங் டெல்லி- புனேரி பால்டன் அணியுடனும் மோதுகின்றன.