டெல்லி அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி…!

348

டெல்லி அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றியை கைப்பற்றியது.
ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 119 வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் 17-க்கு 9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய அந்த அணி 35-32 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு அணி பெறும் 6 வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.