குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக அடுத்த மாதம் சென்னை வருகிறார்.

248

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக அடுத்த மாதம் சென்னை வருகிறார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 10 ம் தேதி, ராணுவ பயிற்சி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி செப்டம்பர் 9ம் தேதி இரவு சென்னை வருகிறார். 10 ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ பயிற்சி அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், 40 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தலைவர் ஒருவர்கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.