காங்கிரஸ் தலைவர் ராகுலை ஆதரித்து பிரியங்கா பிரச்சாரம்..!

205

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் மக்களவை தேர்தலில் 2 போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து இவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பழங்குடியின மக்களின் தற்போதை நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவும், அவர்களின் நிலைகண்டு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தார். நாளை கேரளாவில் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் இன்று பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.