உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வலுப்படுத்த பிரியங்கா காந்தி தீவிரம்..!

88

மக்களவை தேர்தலையொட்டி, உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக, லக்னோவில் மாநில நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த அகமதாபாத்தில் இருந்து, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி வரை 3 நாட்கள் கங்கையில் படகில் சென்று, கிராமங்கள் தோறும் தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முடிவு செய்துள்ளார். இதற்காக, லக்னோ விமான நிலையம் வந்தடைந்த பிரியங்கா காந்திக்கு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனிடையே, பிரியங்கா கா ந்தியை வரவேற்க, மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

காங்கிரஸ் தொண்டர்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே கட்சி அலுவலகம் சென்ற பிரியங்கா காந்தி, அங்கு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன், மாநிலத்தில் கட்சியை மேலும், வலுப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதனைத்தொடர்ந்து, அவர், அகமதாபாத் – வாரணாசி இடையேயான தனது பிரச்சார பயணத்தை நாளை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.