மலையாள நடிகை பிரியா வாரியர் மீது பதிவு செய்த வழக்குகளை விசாரிக்க, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

770

மலையாள நடிகை பிரியா வாரியர் மீது பதிவு செய்த வழக்குகளை விசாரிக்க, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியரின் கண் அசைவு இந்திய பிரபலமானது. இந்த பாடலின் வரிகள், இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல் நிலையங்களில் பிரியா வாரியர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், தன் மீதான இந்த வழக்குகளை ஏற்க முடியாது என, பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிரியா வாரியர் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தனர்.