சிறையில் விதிமீறல்கள் தொடர்பான புகார்-வாக்குமூலம் அளித்தார் சசிகலா…!

724

பரப்பன அக்ரஹார சிறையில் விதிமீறல்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழுவினரிடம் சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. இதனையடுத்து வினய்குமார் தலைமையிலான குழு கடந்த வாரம் முதல் பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வை தொடங்கினர் . அங்குள்ள சிறை ஆவணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதனையடுத்து சசிகலா, தெல்கி உள்பட ஒரு சில கைதிகளிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.