தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் 24 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

234

தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் 24 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண் ஒருவர் வளர்ச்சிக்குன்றிய நிலையில் உள்ள 24 வார கருவை கலைக்க அனுமதிக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கரு வளர்ச்சியற்ற நிலையில் இருப்பதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டினார்.
மேலும், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் வயிற்றில் வளரும் 24 வாரக்கருவை கலைக்க சட்டத்தில் இடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரை விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் 24 மாத கருவை கலைக்க அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தனர்.