தோட்டகலை துறையில் வேலைசெய்யும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வரும் 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தினர், 5 ஆண்டுகளுக்கு மேலாக தோட்ட கலை துறையில் பணி செய்பவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்று கூறிய அவர்கள், இது போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.