அரசு முறைப் பயணமாக சுவிஸ் அதிபர் வருகை குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு!

261

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர் Doris Leuthard-க்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நட்பு நாடுகளில் ஒன்றாக திகழும் சுவிட்சர்லாந்து, இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டு அதிபர் Doris Leuthard மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் சுவிஸ் அதிபரை வரவேற்றனர்.
குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடியை சுவிட்சர்லாந்து அதிபர் Doris Leuthard சந்தித்து பேசுகிறார். சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை தொடர்பாக மோடியும் – Doris Leuthard முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.