குடியரசு தலைவர் உரை ஏமாற்றம் அளிக்கிறது-காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா!

332

குடியரசு தலைவர் உரை ஏமாற்றம் அளிப்பதாகவும், உண்மை நிலையை மறைப்பதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பு இழப்பு என்ற அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி.யை தவறாக அமல்படுத்தியதாலும் நாட்டின் மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லை, நாட்டின் பொருளாதாரமும் உயரவில்லை என்று கூறிய ஆனந்த் சர்மா, விவசாய வளர்ச்சி 4 சதவீதத்தில் இருந்து 1 புள்ளி 9 சதவீதமாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார். உண்மை நிலையையும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் வரும் நாட்களில் காங்கிரஸ் வெளிக்கொண்டு வரும் என்றும் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.