குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது..!

127

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22 -ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதேபோன்று, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இமாச்சல் பிரதேசத்திலும் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 2-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் இதற்கான அறிவிப்பை டெல்லியில் வெளியிடுகிறார்.