நாட்டின் எழுபதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார்.

194

நாட்டின் எழுபதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நாளை காலை பிரதமர் மோடி, மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிலையில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று மாலை நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார். ஆகாசவாணியின் அனைத்து நிலையங்களும் இந்த உரையை இன்று மாலை மணி 7 மணி முதல் நேரடியாக ஒலிபரப்பும். தூர்தர்ஷன் அலைவரிசைகளிலும் இந்த உரை ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது,