முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பிரகாஷ் ராஜ் சந்திப்பு..!

102

நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், டெல்லி முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சித்தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் திடீரென அரசியலில் குதித்ததோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களுருவில் இருந்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவாலை, பிரகாஷ் ராஜ் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

மேலும், ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை நேரடியாக பதிலளிக்காமல் இருப்பது, அவர் ஒளிந்துகொண்டிருப்பதை உறுதிபடுத்துவதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், பெண்களுக்கு எதிரானவர் கிடையாது என்று தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், சமீபத்தில் ஒரு திருநங்கைக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.