வேலை வாய்ப்பின்மை நிலவுவதாக ராகுல் பொய் பிரச்சாரம்-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

310

பாஜக ஆட்சியில் 7 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ள நிலையில், நாட்டில் வேலை வாய்ப்பின்மை நிலவி வருகிறது என்று ராகுல்காந்தி பொய் பிரச்சாரம் செய்வதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக தெரிவித்தார். முத்ரா யோஜ்னா திட்டத்தின் மூலம் 7 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக கூறிய பிரகாஷ் ஜவடேகர், பாஜக ஆட்சியில் திறன்மிகுந்த இளைஞர்களுக்கு பயிற்சி தரும் விதமாக, நேஷனல் கேரியர் போர்டல் தொடங்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டினார். ஆனால், நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை நிலவி வருகிறது என்று ராகுல்காந்தி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார். கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 1 கோடி பேர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் இணைந்துள்ளது மூலம், ஒரு கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.