தனியார் பயிற்சி மையங்களில்மாணவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்- மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர்!

338

தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் பள்ளி மாணவர்கள் குறித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 95 சதவிகிதம் பயிற்சி மையங்களுக்குச் செல்வதாக அமேசாம் ஆய்வு தெரிவிப்பதாகவும்,
தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அதிகரிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பித்தலில் இருக்கும் குறைபாடுகளே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.